சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 13, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'அரசுக்கு எதிரான போராட்டத்தில், மதத்தை புகுத்துவது, தமிழகத்தின் சில பகுதிகளில் வழக்கமாக நடைபெறுகிறது; இது, தடுக்கப்பட வேண்டும்...' என, வலியுறுத்தத் தோன்றும் வகையில், இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் அறிக்கை: தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து, வீடுகளில், கோலம் தீட்டும் போராட்டம் நடத்தப் போவதாக, கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற கிறிஸ்துவ அமைப்பு அறிவித்துள்ளது. அரசு உதவி பெறக்கூடிய கல்வி நிறுவனங்களை, மாணவர்களை, அவர்களின் குடும்பத்தாரை, தவறான திசைக்கு அழைத்து செல்லக்கூடிய அமைப்புகள் மீது, அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டங்களை துாண்டி விடும் அமைப்புகளை முடக்க வேண்டும்.

'அரசு புள்ளி விபரங்கள் பொய் என்றால், சரியான புள்ளி விபரங்களை நீங்களே வெளியிடுவது தானே நியாயமாக இருக்கும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி அறிக்கை: தமிழகத்தில், கொரோனா தொற்று தொடர்பான புள்ளி விபரங்களில் முரண்பாடுகள் உள்ளன. இதனால், தமிழகத்தில் தான், கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை அதிகம் என, அரசு சொல்வது முழுக்க பொய்யோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக, பிம்பத்தை கட்டமைக்க, புள்ளி விபரங்களில் அரசு மோசடி செய்கிறது. இது ஆபத்தான போக்கு.

'விவசாயிகளின் துயர் துடைக்கப்பட வேண்டும்; நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாக செயல்பட வேண்டும்...' என, வலியுறுத்தத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: காவிரி பாசன மாவட்டங்களில், நடப்பாண்டில் வரலாறு காணாத அளவில், குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை, கொள்முதல் செய்ய முடியாமல், கொள்முதல் நிலையங்கள் திணறி வருகின்றன. நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல், சாலைகளில் கொட்டி வைக்கப்படுவதால், மழையில் நனைந்து வீணாகும் ஆபத்து உருவாகி உள்ளது. இது, தடுக்கப்பட வேண்டும்.

'பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து பஸ் பிடித்து, ரயில் நிலையம் சென்று, ரயிலில் ஏறுவார் போலும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் அறிக்கை: தன் இருப்பையும், தன் இழப்பையும், உறுதி செய்வதற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நாளும், பொழுதும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இந்த அறிக்கை எப்படி இருக்கிறது என்றால், ரயிலில் போவதற்கு, பஸ் ஸ்டாண்டில் காத்திருப்பதை போல இருக்கிறது. தவறான பாதையில் அவர் சரியாக ஓடிக் கொண்டிருக்கிறார்.
'அப்போ, தனியார் டாக்டர்கள் நடத்தும் கிளினிக்குகள் கதி என்ன...' என, கேட்கத் தோன்றும் வகையில், அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: தமிழகம் முழுவதும், 2,000 'மினி கிளினிக்' ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகளுடன் டாக்டர், நர்ஸ், உதவியாளர் இடம் பெறுவர். காய்ச்சல், தலைவலி போன்ற சாதாரண நோய்களுக்கு அங்கு மருந்துகள் வழங்கப்படும்.
'பள்ளிக்கல்வித் துறைக்கு இப்போது மிகவும் பிடித்தமான வார்த்தை, 'ஆன்லைன்' என்றாகி விட்டது....' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: தற்போதைய கொரோனா தொற்று சூழலில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கே, கல்வி, 'சேனல்' மூலமாக தான் கல்வி போதிக்கப்படுகிறது. எனவே, அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் மூலமாக தான் புத்தாக்கப்பயிற்சி அளிக்கப்படும். கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, முதல்வரின் ஒப்புதல் பெற்றே முடிவு செய்யப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X