சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: மதுரை மாணவி ஜோதி துர்கா, தற்கொலை செய்து இறந்தார் என்ற செய்தி அறிந்து, மிகுந்த மன வேதனை அடைந்தேன். வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள், இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது, மிகுந்த மன வேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற, எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மன உறுதியையும், விடா முயற்சியையும், வளர்த்து கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம்.

'டவுட்' தனபாலு: 'நீட்' தேர்வை முன்னிறுத்தி, அரசியல் செய்யும் தமிழக எதிர்க்கட்சிகள் போலவே, நீங்களும் அவ்வப்போது, நீட் தேர்வுக்கு எதிராக செயல்படுகிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஏனெனில், தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது, அவர்களுக்கு நிதியுதவி அளிப்பது என நீங்கள் செய்து வந்தால், மாணவர் தற்கொலை எப்போது தடுத்து நிறுத்தப்படும்?

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தமிழகத்தில், ஒரு ஆட்சி இருப்பது போல, முதல்வரும், அமைச்சர்களும் போட்டி போட்டு நடிக்கின்றனர். கொரோனா பாதிப்பில், மக்களை அல்லாட விட்டு விட்டு, மாவட்ட வாரியாக, கட்சியினரை சந்தித்து வருகிறார், முதல்வர் இ.பி.எஸ்., அவர், ஒரு மாவட்டத்திற்கு சென்று திரும்பியதும், அந்த மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகமாகிறது.

'டவுட்' தனபாலு: உங்களின் இந்த பேட்டியை படிக்கும் போது, விரக்தியின் விளிம்பில் நீங்கள் இருப்பது, 'டவுட்' இல்லாமல் அனைவருக்கும் தெரிகிறது. ஏனெனில், கொரோனாவை கட்டுப்படுத்த, மாவட்டம் தோறும் முதல்வர் சுற்றுப்பயணம் செய்யும் போது, அவரால் தான், அந்தந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்படுகிறது என்கிறீர்களே!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: மாணவி ஜோதி துர்கா மாய்ந்தார். 'நீட்' கொடுமைக்கு தீர்வே இல்லையா; நாட்டை ஆளுவோருக்கு நெஞ்சில் ஈரமே இல்லையா; ஆதிக்க வெறியர்கள் அடம் பிடிப்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா... மோடி அரசே, நீட் தேர்வைக் கைவிடு.

'டவுட்' தனபாலு: எத்தனை முறை, மோடி அரசுக்கு எதிராக சாபம் விடுவது போல நீங்கள் பேசினாலும், தமிழகத்தில், நீட் தேர்வின் மோகம் குறையவில்லை என்பதை, நேற்று தேர்வு எழுதிய, 1.17 லட்சம் மாணவர்களை பார்த்தும் நீங்கள் திருந்தவில்லையோ என்ற, 'டவுட்' தான் வருகிறது!

தி.மு.க., - ஐ.டி., அணி மாநில செயலர், எம்.எல்.ஏ., - பி.டி.ஆர்.பி.தியாகாஜன்: தமிழகத்தில், ஹிந்து மதவழிபாட்டு தலங்கள் அதிகமாக உள்ளன. இங்கு, ஹிந்து மதத்தை வைத்து அரசியல் செய்வது தவறு. எச்.ராஜா, நாராயணன் திருப்பதி, கே.டி.ராகவன் போன்றவர்களை விட, கோவில்களுக்கும், ஹிந்து மதத்திற்கும், அதிக பணிகளை செய்துள்ளேன். '

டவுட்' தனபாலு: உங்கள் தந்தை, பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், நெற்றி நிறைய விபூதியுடனும், குங்குமத்துடனும் இருப்பார். அதைப் பார்த்து, அடிக்கடி, தி.மு.க., தலைவர் கருணாநிதி கிண்டல் செய்துள்ளார். எனினும், நீங்கள் அந்த கட்சியிலேயே தொடர்கிறீர்கள். இதைப் பார்க்கும் போது, இறைபக்தி மற்றும் மதத்தை விட, அரசியல் தான் உங்களுக்கு பெரிது என்பது, 'டவுட்' இன்றி, அனைவருக்கும் தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-செப்-202006:28:28 IST Report Abuse
D.Ambujavalli லட்சக்கணக்கில் மாணவர்கள் எழுதும் போது, தயார் செய்ததில் தன்னம்பிக்கை இல்லாமலும், பெற்றோரின் அழுத்தத்தினாலும் ஓரிரு தற்கொலைகள் நீட்டில் மட்டுமில்லை, பத்தாவது, ப்ளஸ்ஒன் எல்லாவற்றிலும் நடக்கும். எல்லாருக்கும் நிவாரணம் கொடுத்துக்கொண்டிருந்தால் வெறெந்தக் காரணமானாலும் தேர்வைக் காட்டி, அனுதாபம், நிவாரணம் என்று கிளம்ப ஊக்குவிக்கிறது இச்செயல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X