பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஏகாதசி பூஜைதிருவாடானை: தொண்டியில் ஹிந்து கடவுள் உந்திபூத்த பெருமாள் கோயிலில் ஆவணி ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். சிறப்பு தீபாராதனை நடந்தது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்றனர்.

கொடை விழாசாயல்குடி: பூப்பாண்டியபுரத்தில் உள்ள செல்வவிநாயகர், பத்திரகாளியம்மன், உஜ்ஜயினி காளியம்மன்கோயிலில் ஆவணி கொடை விழா நடந்தது. மூலவர்களுக்கு பால், பன்னீர்,தயிர், வாசனை திரவியங்களால் அபிஷேக, ஆராதனை நடந்தது.பெண்கள் பொங்கலிட்டனர்.

பூங்காவை சீரமைக்க கோரிக்கைசாயல்குடி: சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட கக்கன் பூங்காவை சீரமைக்க வேண்டும். மூக்கையூர் செல்லும் ரோட்டில் பூங்கா, அங்கன் வாடிமையக் கட்டடம்,குடிநீர் மேல்நிலைத்தொட்டி, கலையரங்கம் உள்ளிட்டவை உள்ளன. ஒரு ஏக்கரில் உள்ள கக்கன் பூங்கா திறந்தவெளியாக உள்ளதால் அப்பகுதியை திறந்த வெளிக் கழிப்பிடமாக பயன்படுத்தும் போக்கு தொடர்கிறது. இதனால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது.

மண் அரிப்பால் சேதமடைந்த ரோடுஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துார் விலக்கில் இருந்து சீனாங்குடி கிராமத்திற்கு ரோடு வசதி உள்ளது. 2 கி.மீ., தொலைவு கொண்ட இந்த ரோட்டின் இரு ஓரங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வழியாக செல்லும்வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. அதிகாரிகள் மண் அரிப்பால் சேதமடைந்து வரும் ரோட்டை சீரமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.

மீட்கப்பட்டோருக்கு பயிற்சி ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே குழந்தை திருமணத்தை நிறுத்தி மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு சமூக நலத்துறை சார்பில் தையல் பயிற்சி அளிக்கப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை, சைல்டு லைன், காருண்யா தொண்டு நிறுவனம் இணைந்து தங்கச்சிமடத்தில் குழந்தை திருமணம் மீட்கப்பட்ட குழந்தைகள், பள்ளி இடைநின்ற மாணவிகள் 20 பேருக்கு தையல் பயிற்சி முகாம் துவங்கியது.

முகாமில் பெண் குழந்தைகளுக்கு, அனைத்து தரப்பு ஆடைகள் தையல் கற்பித்தல் குறித்து செயல்முறை விளக்கமளிக்க உள்ளனர். முகாமை மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயந்தி துவக்கி வைத்தார்.சிதிலமடைந்து வரும் பூங்காதேவிபட்டினம்: சித்தார்கோட்டை சமத்துவபுரத்தில் அப்பகுதி சிறுவர்கள்பயன்பெறும் வகையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தலைவர்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சில ஆண்டுகளாக இந்த சமத்துவபுர சிறுவர் பூங்காவை அதிகாரிகள் முறையாக பராமரிப்பு செய்யாததால், விளையாட்டு உபகரணங்கள் சிதிலமடைந்து அரசு பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி நிர்வாகம் பயனற்ற நிலையில் உள்ள சமத்துவபுர பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கையெடுக்க வேண்டும்.கால்நடை மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பாலைக்குடியை மையப்பகுதியாக கொண்டு 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம பகுதிகளில் விவசாயிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.

கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு உட்பட்டால் தேவிபட்டினம், உப்பூர் பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.அப்பகுதியினருக்கு கால விரயம் மற்றும் பண விரயம் ஏற்படுவதுடன், உடனுக்குடன் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி திருப்பாலைக்குடியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X