சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பறம்பு மலை உடைப்பு கண்டித்து 16 இடங்களில் ஆர்ப்பாட்டம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

சிவகங்கை : சிங்கம்புணரி பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பறம்பு மலையில் கல்உடைப்பதை கண்டித்து சிவகங்கை, புதுக்கோட்டை உட்பட 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாரி மன்னர் ஆண்ட பறம்புமலைப்பகுதி வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இப்பகுதியில் மலையை உடைக்க குவாரி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள், பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகங்கையில் அரண்மனை, சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட், காளையார்கோவில், கல்லல், மானாமதுரை உட்பட 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X