சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்புவனத்தில் டவுன் பஸ்களை முழுமையாக இயக்க வலியுறுத்தல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்புவனம் : திருப்புவனம் சுற்று வட்டார கிராமங்களுக்கு டவுன் பஸ்களை முழுமையாக இயக்க வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்புவனத்தை மையமாக வைத்து 44 நகர பேருந்துகள் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மதுரைக்கு இயக்கப்படுகிறது. இதுதவிர மதுரை நகர் பணிமனையில் இருந்தும் டவுன் பஸ்கள் திருப்புவனத்திற்கு இயக்கப்படுகிறது.சில மாதங்களாக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால்பலரும் டூவீலர், ஆட்டோ, சரக்கு வாகனங்களில் மதுரை சென்று வருகின்றனர். ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நகர பேருந்துகளையும் இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கிராமமக்கள் கூறுகையில் தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்வதுடன் அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. இரவில் சரியான நேரத்தில் வாகனங்கள் கிடைப்பதில்லை அரசு பஸ்களை இயக்கினால் பாதுகாப்பாக இருப்பதோடு செலவும் மிச்சமாகும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X