பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேர்வெழுதுவோருக்கு 'சோதனை'

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோவை:மாற்றுத்திறன் மாணவர்களுக்காக பொதுத்தேர்வு எழுத வருவோர், கட்டாயம் வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இடைநிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 21ம் தேதி சிறப்பு துணைத்தேர்வு துவங்குகிறது. தொடக்க கல்வி பட்டய தேர்வும், இம்மாதம் நடக்கிறது. இத்தேர்வு எழுதும் மாற்றுத்திறன் மாணவர்கள் சிலர் சலுகை கோரி, சென்னை ஐகோர்ட்டை அணுகினர்.கோர்ட் உத்தரவுப்படி, சலுகை கோரியவர்கள், மாற்றுத்திறன் மாணவர்கள் சொல்வதை எழுதுபவர்கள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே, மாற்றுத்திறன் மாணவர்களுடன் தேர்வெழுத வருபவர்கள் மட்டும், பரிசோதனை மேற்கொள்வதில் சிரமம் இருந்தால், வரும் 15ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை, 0422- 235 1849, 0422- 239 1062 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.மாற்றுத்திறன் மாணவர்கள் இப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை. தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை, தேர்வெழுதும் மையத்திற்கு எடுத்து வருவது அவசியம் என, முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X