சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பு ஊழியர் மீது கல்: வாலிபர்களிடம் விசாரணை

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோவை:தண்டவாள பராமரிப்பின் போது, ஊழியர்கள் மீது கல்வீசி தாக்கிய நபரை பிடித்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை சிங்காநல்லுார் அருகே, ரயில்வே கேட் பகுதியில், நேற்று தண்டவாள பராமரிப்பு பணி நடந்தது. ரயில்வே தண்டவாளத்தில் நடந்து வந்த வாலிபர் ஒருவர், திடீரென அங்கிருந்த கற்களை எடுத்து அவ்வழியாக சென்ற வாகனங்கள், பொதுமக்கள் மீது வீசினார்.அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அவ்வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவ்வாலிபர் ஊழியர்கள் மீதும் கற்களை வீசி, தாக்குதலில் ஈடுபட்டார்.ஊழியர்கள் அந்நபரை பிடித்து, பொதுமக்கள் உதவியுடன் கயிற்றால் கட்டினர். ரயில்வே மற்றும் சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X