பொது செய்தி

தமிழ்நாடு

தேவகோட்டையில் வாரச்சந்தை நடத்த அனுமதி

Added : செப் 13, 2020
Share
Advertisement

தேவகோட்டை : தேவகோட்டையில் வாரச்சந்தை நடத்த அனுமதிக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேவகோட்டையில் வாரச்சந்தை ஞாயிறு தோறும் கண்டதேவி ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடைபெறும். ஊரடங்கு காரணமாக மார்ச் முதல் வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தினசரி சந்தையும் நான்கு இடங்களில் பிரித்து நடத்தப்பட்டது. தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் வழக்கமான சந்தை நடத்த ஆரம்பித்து விட்டனர். இதனை தொடர்ந்து காய்கறி வியாபாரிகள் வழக்கமான இடத்தில் தினசரி மார்க்கெட், ஞாயிறன்று வாரச்சந்தை நடத்த அனுமதி கோரி நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

நகராட்சி கமிஷனர் அய்யனார், வருவாய் ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் துணை கலெக்டர் சுரேந்திரனிடம் வியாபாரிகளின் கோரிக்கை குறித்து பேசினர். எவ்வித அனுமதியும் கிடைக்க வில்லை.வரும் வாரங்களிலாவது சந்தை நடத்த அதிகாரிகள்அனுமதிக்க வேண்டுமென வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X