தரிசனத்துக்கு அனுமதி இந்து முன்னணி கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தரிசனத்துக்கு அனுமதி இந்து முன்னணி கோரிக்கை

Added : செப் 13, 2020
Share

திருப்பூர்:''புரட்டாசி சனிக்கிழமை, கோவில்களில் பக்தர் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும்,'' என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை;கொரோனா தொற்றால், கடந்த நான்கு மாதமாக மூடப்பட்ட கோவில்கள், கடந்த வாரம் முதல் திறக்கப்பட்டு, பக்தர் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பக்தர்கள், வரிசையாக நின்று, சமூக இடைவெளியுடன் வழிபட்டு செல்கின்றனர். புரட்டாசி மாதம் வரவுள்ள நிலையில், வைணவ சமயத்தின் சிறப்புமிக்க மாதமாக கருதப்படுகிறது.இம்மாத சனிக்கிழமையில், பெருமாளை வணங்குவது நன்மை தரும் என்பது, நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமை, பக்தர்கள், வழிபாடு நடத்த கலெக்டர்கள் அனுமதி வழங்க முடியும். இவ்விஷயத்தில், சில மாவட்ட கலெக்டர்கள், புரட்டாசி சனிக்கிழமையன்று, கோவிலை மூட முயற்சி செய்வதாக தகவல் வருகிறது. அனைத்து வைணவ கோவில்களிலும், சமூக இடைவெளியுடன் பக்தர் தரிசனம் செய்ய, அரசு ஆவணம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X