பொது செய்தி

தமிழ்நாடு

தொற்றின் தீவிரம் தெரியணுமா...

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்பூர்:'சி.டி., ஸ்கேன் மூலம், கொரோனா தொற்று பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.திருப்பூரில், கொரோனா பரவல் அதிகரித்தாலும், பலருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால், விரைந்து குணமடைகின்றனர்.கொரோனா தொற்று முடிவை, துல்லியமாக கண்டறிய, பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது. இருப்பினும், சிலருக்கு அறிகுறி இல்லாமலேயே தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்படுகிறது.அரசு டாக்டர்கள் கூறியதாவது:பி.சி.ஆர்., பரிசோதனையில் 'நெகட்டிவ்' முடிவு தெரிந்தும், சிலருக்கு தொற்று அறிகுறி தென்படுகிறது. அவர்கள், சி.டி., ஸ்கேன் செய்து கொள்ளலாம்.இதன்மூலம், நோயின் தீவிரத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியும். அதேபோல், வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு, குணமடைவோர், 15 முதல், 20 நாளுக்கு பின், சி.டி., ஸ்கேன், செய்து கொள்வது நல்லது.இதன்மூலம், நோய் பாதிப்பு குறைந்துள்ளதா, பூரண குணம் பெற்றுவிட்டோமா, தனிமைப்படுத்தும் நாட்களை முடித்துக்கொள்ளலாமா என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X