பொது செய்தி

தமிழ்நாடு

திருக்குறளை ஊக்குவிக்கும் 87 வயது ஓய்வு தாசில்தார்

Added : செப் 13, 2020
Share
Advertisement

மானாமதுரை : மானாமதுரையைச் சேர்ந்த 87 வயது ஓய்வு பெற்ற தாசில்தார் ஜவஹர்லால், இளைஞர்களிடையே திருக்குறளையும் மற்ற புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தி வருகிறார்.

மானாமதுரை பூக்கார தெருவைச் சேர்ந்தவர் ஜவஹர்லால்87,ஓய்வு பெற்ற தாசில்தாரான இவர் ஓய்வுக்குபின் மகன் ராமச்சந்திரனுடன் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் தினசரி நாளிதழ்கள் மற்றும்திருக்குறள் படிக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார். அனைத்து குறள்களையும் மனப்பாடமாக படித்து வைத்துஉள்ளார்.தற்போது கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு திருக்குறள் மற்றும் மற்ற புத்தகங்களை படிக்க கொடுத்து அவர்களை ஊக்குவித்து வருகிறார்.

அவர் கூறுகையில், தினந்தோறும் திருக்குறளை படித்தால் உடல்நிலை புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதால் தனது அன்றாட வேலைகளை இந்த வயதிலும் தன்னால் செய்ய முடிகிறது என்றும் மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு புத்தகங்களை வாசிப்புத்திறன் மேம்பட என்னால் ஆன உதவிகளையும் செய்து வருவதாக கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X