பொது செய்தி

தமிழ்நாடு

டவுன் பஸ்களில் கூட்டம் இல்லை

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்புத்துார் : கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு தளர்வை அடுத்து தற்போது அரசு பஸ் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் திருப்புத்துாரில் டவுன் பஸ்களில் கூட்டம் இல்லாத நிலை நீடிக்கிறது.

திருப்புத்துாரில் வழக்கமாக 17 அரசு டவுன் பஸ்கள் உட்பட சில தனியார் பஸ்கள்,மினி பஸ்கள் இயங்கின.ஊரடங்கு தளர்விற்கு பிறகு முதற் கட்டமாக இயக்கப்பட்ட 50 சதவீத பஸ்கள் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. சில பயணிகள் மட்டும் ஏறியதால் வருவாய் குறைந்தது. தற்போது இரண்டு டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கொரோனா காலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள்டூவீலர் மற்றும் கார்,ஆட்டோக்களில் சென்று வர துவங்கினர்.தற்போது கிராமங்களுக்கு பஸ்சை பயன்படுத்தும் மக்கள் குறைந்து விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X