பொது செய்தி

தமிழ்நாடு

நம்பிக்கை தரும் சித்தா சிகிச்சை: கவலைக்கிடமான கட்டமைப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், சித்தா சிகிச்சை மையம், கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை தரும் நிலையில், கட்டமைப்பு கவலையளிப்பதாக உள்ளது.திருப்பூர், காங்கயம் ரோடு, செயின்ட் ஜோசப் பள்ளி கட்டடத்தில், கொரோனா சித்தா சிகிச்சை மையம் செயல்படுகிறது. லேசான அறிகுறி தென்படும் நோயாளிகள், அவர்களது விருப்பத்திற்கேற்ப, இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பலரும் சிகிச்சையில் குணமடைந்து, வீடு திரும்புகின்றனர்.சிகிச்சை மையத்தில், டாக்டர் மற்றும் பணியாளர்களுக்கு போதிய கட்டமைப்பு வசதியில்லை. டாக்டர் மற்றும் பணியாளர்களுக்கு, தனிமை மற்றும் ஓய்வு அடிப்படையில் பணிபுரிய, கூடுதல் அறை ஒதுக்கப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.மருத்துவ பணியாளர் சிலர் கூறுகையில், 'சிகிச்சை மையத்தில் டாக்டர் மற்றும் பணியாளர்கள், நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்து சிகிச்சையளிக்கின்றனர். இதனால், பணியில் உள்ள பிறர்க்கு தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில், கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். பணிச்சூழல் மற்றும் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள அளிக்கப்பட்டுள்ள மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X