பொது செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆர்வம் காட்டிய மாணவர் : முதன்முறை திருப்பூரில் மையம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில் முதன் முறையாக நடந்த நீட் தேர்வில், திருப்பூர் மையத்தில், அனுமதிக்கப்பட்ட, 1,080 மாணவர்களில், 921 பேர் தேர்வெழுதினர்; 159 ஆப்சென்ட் ஆகினர்.மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட, 14 நகரங்களில், 238 மையங்களில் நேற்று நடந்தது. கோவை மண்டலத்தில் அமைக்கப்பட்ட, 16 தேர்வு மையத்தில், திருப்பூர் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியும் ஒன்று.வழக்கமாக காலையில் நடக்கும் தேர்வு, இம்முறை, மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடந்தது. அனுமதிக்கப்பட்ட, 1,080 மாணவர்களில், 921 பேர் தேர்வெழுதினர்; 159 ஆப்சென்ட் ஆகினர்.உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டு, காலை, 11:00 மணி முதல் மாணவர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அறிவுறுத்தியபடி, மாணவர்கள் முக கவசம் மற்றும் கையுறை அணிந்திருந்தனர்.காலை, 11:40 மணி முதல் அடையாள அட்டை, ஹால் டிக்கெட் பரிசோதனை துவங்கியது. தண்ணீர் பாட்டில் மற்றும், 50 மி.லி., சானிடைசர் பாட்டில் மட்டுமே தேர்வறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. ஒரு தேர்வறைக்கு, 2 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.பரிசோதனைக்காக, காலை, 11:00 மணிக்கே தேர்வு மையத்திற்கு வர அறிவுறுத்தியதால், மதிய உணவு உண்ண நேரம், வாய்ப்பு கிடைக்காமல் பசியுடன் தேர்வெழுத வேண்டியிருந்தது.நீண்ட வரிசையில் காத்திருந்து, சோதனைகளை முடித்து, மையத்திற்குள் செல்வதற்குள் சோர்வடைந்துவிட்டனர். சோர்வை வெளிக்காட்டாமல், மாணவர்கள் தேர்வெழுதினர்.மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், ''நேற்று நடந்த நீட் தேர்வில், திருப்பூர் மாவட்ட அளவில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை பொறுத்தவரை, 146 பேர் தேர்வில் பங்கேற்றனர்.மனதளவில் இவர்களை தயார்ப்படுத்த, ஏற்கனவே இணையவழியில், தன்னம்பிக்கை கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X