பொது செய்தி

தமிழ்நாடு

பனியன் பஜாரில் விற்பனை 'ஜோர்'

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்பூர்:காதர்பேட்டையில், ஆடை வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்புவதால், வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர், காதர்பேட்டையில், சில்லரை, மொத்த ஆடை வர்த்தக கடை, பெருமளவில் உள்ளன. அனைத்து வகை ஆடை ரகங்களும் குறைந்த விலைக்கு கிடைப்பதால், 'ரெகுலர்' வாடிக்கையாளர்கள் அதிகம்.வார நாட்களை காட்டிலும், ஞாயிறு விடுமுறையில், காதர்பேட்டை களைகட்டும். கொரோனா ஊரடங்கால், கடந்த ஐந்து மாதமாக, வர்த்தகம் முழுமையாக முடங்கியது; வருவாய் இழப்பு ஏற்பட்டதால், வியாபாரிகள் கவலையடைந்தனர்.தற்போது, முழு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், காதர்பேட்டை களைகட்ட துவங்கியிருக்கிறது. விடுமுறை நாளான நேற்று, வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒவ்வொரு கடைக்கும், வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.ஆடை வர்த்தகர்கள் கூறுகையில்,'கடந்த ஐந்து மாதமாக பெரும் பொருளாதார நெருக்கடி சந்திக்க நேரிட்டது. ஞாயிறு முழு ஊரடங்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது, ஆடை வர்த்தகம் துவங்கியுள்ளது. இது, ஆறுதல் அளிக்கிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X