பொது செய்தி

தமிழ்நாடு

77 நடமாடும் ரேஷன் கடை இடம் தேர்வு பணி துவக்கம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஒன்பது தாலுகாக்களில், 77 நடமாடும் ரேஷன் கடை இயங்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.ரேஷன் கடையில் இருந்து, தொலைவில் உள்ள குக்கிராம மக்களின் சிரமம் களைய, நடமாடும் ரேஷன்கடை திட்டம், மாநில அரசால், கொண்டு வரப்பட உள்ளது. மாநிலத்தில், 9.66 கோடி ரூபாய் செலவில், 3,501 நடமாடும் ரேஷன் கடை செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அளவில், தேர்வு செய்யப்பட உள்ள கிராமங்கள் மற்றும் பிற பணி குறித்து, கூட்டுறவு துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், 77 நடமாடும் ரேஷன் கடை ஒதுக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பொறுப்பில், இதற்கான ஏற்பாடு செய்யப்படும். அரிசி,பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள், 'பாயின்ட் ஆப் சேல்' கருவி மூலம், விற்பனையாளர்கள், குக்கிராமத்துக்கு சென்று விற்பனை செய்வர்.செல்ல வேண்டிய குக்கிராமங்கள் எவை என்பது குறித்து, கலெக்டர் இறுதி முடிவெடுப்பார். மாதம் ஒருமுறை, நடமாடும் ரேஷன் கடை மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட குக்கிராமத்தில் விற்பனை நடக்கும். மாநில அரசின் வழிகாட்டுதல் கிடைத்ததும், பணி துவங்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X