தமிழ்நாடு

இது, சரியா? நோய் தடுப்பு விதிமுறையை காற்றில் பறக்கவிட்டு, பஸ் பயணம்

Updated : செப் 14, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
இது, சரியா? நோய் தடுப்பு விதிமுறையை காற்றில் பறக்கவிட்டு, பஸ் பயணம்

திருப்பூர்;நோய் தடுப்பு விதிமுறையை காற்றில் பறக்கவிட்டு, பஸ் பயணத்தை, பொதுமக்கள் மேற்கொண்டனர்.ஊரடங்கு முழுமை யாக தளர்த்தப்பட்ட நிலை யில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப துவங்கியுள்ளனர். அதே நேரம், பொதுமக்களின் நட மாட்டத்துக்கு ஏற்ப, நோய் தொற்று பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு விதிமுறையை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, முக கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என, சுகாதார துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும், இதை பொதுமக்கள் மறந்து, இயல்பு வாழ்க்கை வாழ துவங்கியுள்ளனர்.நேற்று, கடைவீதி, உழவர் சந்தையில் கூட்டம் அலைமோதியது. புதியதாக, இடம் மாற்றம் செய்யப்பட்ட, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படும் தினசரி மார்க்கெட்டில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
வெளியிடங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்கு பலரும் நகரை நோக்கி வந்ததால், காமராஜர் ரோடு, குமரன் ரோடு, முனிசிபல் ஆபீஸ் வீதி, புதுமார்க்கெட் வீதியில் வழக்கத்தைவிட கூட்டத்தை காண முடிந்தது.அரசு பஸ் இயக்கம் துவங்கிய நிலையில், தற்காலிக பஸ் ஸ்டாண்டில், நேற்று காலை முதலே கூட்டம் காணப்பட்டது.மதுரை, தேனி செல்லும் பஸ்களில், மக்கள் நெருக்கியடித்து ஏறினர்.
சமூக இடைவெளி, முக கவசம் அணிவது என, எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. பஸ்சில் இடம்பிடிக்க, முண்டியடித்தனர்.கூட்ட நெரிசலை சமாளிக்க போக்குவரத்து துறையினர், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய சூழலில் முடிந்த வரை குழந்தை மற்றும் முதியோரை அழைத்து வர வேண்டாம் என்ற அறிவுரையும், காற்றில் பறக்கவிடப்பட்டது.வரும் நாட்களில், வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல், தனி நபர் இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
14-செப்-202016:27:39 IST Report Abuse
a natanasabapathy அரசு மெத்தனமாக இருக்கிறது என்று கத்தும் சுடலையாண்டி இதற்க்கு என்ன சொல்லப்போகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X