பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன் பயிற்சி உதவியது': தேர்வெழுதிய மாணவர் உற்சாகம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

அழகுமுத்து கார்த்திகா, அரசு மேல்நிலைப்பள்ளி, கணக்கம்பாளையம்.'ஸ்டேட் போர்டில்' இருந்து நிறைய கேள்வி கேட்கப்பட்டது. பயோலஜி, வேதியியல் பாடப்பிரிவு கேள்வி, எளிதாக இருந்தது. இயற்பியலில் மட்டும், தீர்வு காணக்கூடிய கேள்வி அதிகம் இருந்தது. நேரடி கேள்விகள் குறைவாக இருந்தது. திருப்தியாகவே உணர்ந்தேன்.கோகிலவாணி, ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.ஊரடங்கில், நீட் தேர்வுக்கு அரசு வழங்கிய 'ஆன்லைன்' பயிற்சி பயனளித்தது. நேரடி கேள்விகள், பயோலஜி பாடத்தில் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. வேதியியலில், ஆர்கானிக் சம்பந்தமான கேள்விகள் எளிதாக இருந்தன. இயற்பியலில், கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. காலை முதல் மாலை வரை, தேர்வு அரங்கில் இருந்ததால், சற்று சோர்வாக உணர்ந்தோம்; மற்றபடி, திருப்திகரமாகவே உணர்ந்தேன்.ஜீவானந்தம், பிஷப் உபகாரசுவாமி மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.எதிர்பார்த்ததை விட ரொம்ப 'ஈஸி'யாகவே, தேர்வு இருந்தது. வேதியியல், இயற்பியல் ஓரிரு கேள்விகள் சிரமமாக இருந்தது. பயோலஜியில் அனைத்து கேள்விகளுமே விடையளிக்கும் வகையில் இருந்தது. 450 மதிப்பெண்ணுக்கு மேல் பெறுவேன் என்ற நம்பிக்கையுள்ளது. வழக்கம்போல், காலையில் தேர்வு வைத்திருந்தால் உற்சாகமாக உணர்ந்திருப்பேன்.பிருந்தா, அரசு மேல்நிலைப்பள்ளி, கணபதிபாளையம், திருப்பூர்.இயற்பியல் பாடத்தில், சில கேள்விகள் நேரடியாகவே கேட்கப்பட்டிருந்தது. மற்ற அனைத்தும் தீர்வு காணும் வகையில் இருந்தன. 'வொர்க் அவுட்' செய்ய அதிகம் நேரம் எடுத்துக்கொண்டது. பயோலஜி பாடத்தில் எதிர்பார்த்த கேள்வி, அதிகம் வந்திருந்தது. வேதியியல், சற்று கடினமாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X