நாற்றுகள் வாங்க முடியாமல் மல்லிகை விவசாயிகள் சிரமம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாற்றுகள் வாங்க முடியாமல் மல்லிகை விவசாயிகள் சிரமம்

Added : செப் 14, 2020
Share

கம்பம் : தேனி மாவட்டத்தில் மல்லிக்கை பூ சாகுபடிக்குரிய நாற்றுகள் வாங்குவதில் சிரமம் உள்ளதால் இதனை தோட்டக்கலைத்துறை வினியோகம் செய்ய விவசாயிகள் கோரி வருகின்றனர்.மாவட்டத்தில் செண்டுப்பூ, மல்லிக்கை அதிக பரப்பளவில் சாகுபடியாகிறது.

விவசாயிகள் பதியன் முறையில் மல்லிக்கை செடி வளர்க்கின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து பதியன் வருகிறது. பூ மொத்த வியாபாரிகள் வாங்கி தருகின்றனர். எக்டேருக்கு 5 ஆயிரம் பதியன்கள் தேவைப்படும். நடவு செய்த முதல் ஆண்டிலிருந்து மகசூல் கிடைக்கும். எக்டருக்கு 8 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். தோட்டக்கலை துறை மானியம் வழங்கி, நாற்றுகள் வழங்கினால் அதிக பரப்பில் சாகுபடி மேற்கொள்வோம் என விவசாயிகள் கோரியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X