பொது செய்தி

தமிழ்நாடு

பணியிடங்களை அதிகரிக்க வி.ஏ.ஓ.,க்கள் வலியுறுத்தல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கம்பம் : கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை தேவைக்கேற்ப அதிகரிக்க அரசு உத்தரவிட வேண்டும் என சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் ராமர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 1984ல், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 12,563 பணியிடங்கள் உருவாக்கினார். அதன் பின்மக்கள் தொகை பெருக்கம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பேரிடர்காலப்பணி கருத்தில்கொண்டு, தற்போதுள்ள நிலைக்கு ஏற்ப பெரிய கிராமங்களை பிரித்து புதிதாக பணியிடங்கள் தோற்று விக்க வேண்டும். கிராம கணக்குகள், நிலவரி வருவாய், சாகுபடி பரப்பு, சிட்டா, அடங்கல் எனபல்வேறு ஆதார ஆணவங்கள் வி.ஏ.ஓ.,க்களிடம் உள்ளது.

எவ்வளவு எண்ணிக்கையில் வி.ஏ.ஓ.க்கள் தேவைப்படும் என்பதை ஆய்வு செய்து, கூடுதல் வி.ஏ.ஓ., பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X