சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழை பெய்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை

Added : செப் 14, 2020
Share
Advertisement

உத்தமபாளையம் : மேகமலையில் ஒரு மாதத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தும் சண்முகாநதி அணை நிரம்பாததால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சண்முகா நதி அணையின் கொள்ளளவு 52.5 அடியாகும். அணைநிரம்பும் போது பாசனத்திற்கு திறந்து நீர் மட்டம் 26 அடியாகும் வரை தண்ணீர் எடுக்கலாம். 2019 டிச. 9 ல் தண்ணீர் திறந்து ஜனவரி வரை வழங்கப்பட்டது. பிப்ரவரி முதல் அணை நீர் மட்டம் 26 அடியாக உள்ளது. மேகமலை, ைஹவேவிஸ், இரவங்கலாறு, மகாராஜாமெட்டு,மணலாறு மலைப்பகுதிகளில் ஒரு மாதமாகநல்ல மழை பெய்து இங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளது. ஆனால்சண்முகாநதி அணை மட்டும் ஒரு அடி கூடஉயராமல் தொடர்ந்து 26 அடியில் உள்ளது.

இந்த அணை நீரை நம்பிராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், அப்பிபட்டி, எரசை, ஓடைப்பட்டி கிராமங்களில் 1400ஏக்கர் நிலங்கள் பாசனதிற்காக காத்திருக்கின்றன. பொதுப்பணித்துறையினர் கூறுகையில்,, சண்முகாநதி அணைக்கு தென்மேற்கு பருவ மழையால் பயனில்லை. வடகிழக்கு பருவமழையில்தான் அணை நிரம்பும்.இம் மாதம் அணை நிரம்ப வாய்ப்புள்ளது. நவ.,டிசம்பரில் தண்ணீர் திறப்பு இருக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X