பொது செய்தி

தமிழ்நாடு

'ஜி.எஸ்.டி.,யில் அலட்சியம் கூடாது'

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருப்பூர்:''ஜி.எஸ்.டி.,யில், அலட்சியமாக செயல்பட்டால், வர்த்தகத்தில் ஈடுபட முடியாது'' என, ஆடிட்டர் முரளி பேசினார்.திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு சார்பில், ஜி.எஸ்.டி., குறித்த 'ஆன்லைன்' கருத்தரங்கம் நடந்தது. வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் துவக்கிவைத்தார்.ஆடிட்டர் முரளி பேசியதாவது:ஜி.எஸ்.டி., பதிவு செய்த வர்த்தகர்கள் அனைவரும், உரிய காலத்துக்குள் முறையாக, கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டுவர்த்தகம், 1.50 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள வர்த்தகர்கள், காலாண்டுக்கு ஒருமுறையும், 1.50 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்வோர், மாதம்தோறும் கணக்கு தாக்கல் செய்யவேண்டும்.வரித்துறை அதிகாரிகள், இ-மெயிலில் அனுப்பும் நோட்டீஸ்க்கு, தாமதிக்காமல் பதில் அளிக்க வேண்டும். முறையாக வரி தொகை செலுத்தினாலும், கணக்கு தாக்கல் செய்தாலும், நோட்ஸூக்கு பதில் அளிக்கவில்லையென்றால், ஜி.எஸ்.டி., எண் முடக்கப்படலாம்; வர்த்தகம் செய்யமுடியாது.வர்த்தகத்தை கைவிடும்போது, அதற்கான ஜி.எஸ்.டி., படிவம் 10, வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், ஜி.எஸ்.டி., எண் நீக்கப்படாது. என்றேனும் ஒருநாள், வரி செலுத்தாமைக்கான கேள்வி எழலாம்; வீண் அபராதம் செலுத்த நேரிடும்.இவ்வாறு, அவர் பேசினார்.திருப்பூர் பகுதி ஆடிட்டர்கள், ஆடை உற்பத்தி துறையினர் பங்கேற்றனர். சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு பொது செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X