பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டில் தனிமை; நலமறிவது எப்படி?

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருப்பூர்:வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள், தங்கள் உடல்நிலை குறித்த விவரத்தை, மாவட்ட கண்காணிப்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தீவிர பாதிப்படைவோர் மட்டுமே, மருத்துவமனையில் தங்க வைத்து, சிகிச்சையளிக்கப்படுகிறது. லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு 'கோவிட் கேர்' மையங்களில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அறிகுறி இல்லாதவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.'கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள், அறிகுறி தெரிந்து, 10 நாட்களுக்கு பிறகும், 3 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இல்லாமலும் இருந்தால், தனிமையை முடித்து கொள்ளலாம்; வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வதற்கான காலம் முடிந்த பிறகு சோதனை அவசியமில்லை' என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.சிலர், தனிமை காலத்தில் கூட, வெளியே உலா வருகின்றனர். வீட்டு தனிமையில் இருப்போர், தாங்கள் உடல்நலம் பெற்ற விவரத்தை, மாவட்ட கண்காணிப்பு அலுவலருக்கு தெரியப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளை, மாவட்ட சுகாதார துறையினர் மேற்கொள்ளவதன் மூலம், தனிமையில் இருப்போரும் தொற்று நீங்கியதை உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X