பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் பயணம்; வந்திறங்குவோரே அதிகம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருப்பூர்;'திருப்பூரை பொறுத்தவரை பயணிகள் ரயில் இயக்கத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை' என, ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.ஊரடங்கு தளர்வு விலக்கப்பட்ட நிலையில், கடந்த, 7ம் தேதி முதல் கோவை-சென்னை இடையே நான்கு ரயில், கோவை - மயிலாடுதுறை என, ஐந்து ரயில் இயக்கப்பட்டது. கோவையில் புறப்படும் இந்த ரயில், திருப்பூரை கடந்து பயணிக்கிறது. முதல் இரு நாட்கள், திருப்பூரில் இருந்து சென்னைக்கு நுாற்றுக்கும் குறைவானவர்களே பயணித்தனர்.திருச்சி, தஞ்சாவூர் மார்க்கமாக ரயில் செல்வதால், மயிலாடுதுறைக்கு ஓரளவு கூட்டம் இருந்தது. பயணிகள் ரயில் இயக்கம் துவங்கி, ஐந்து நாட்கள் கடந்துவிட்ட போதிலும், டிக்கெட் முன்பதிவில் சுறுசுறுப்பில்லை. வழக்கமாக காலை, 8:00 மணிக்கு முன்பதிவு 'கவுன்டர்' திறக்கும்போது, வரிசையில் பயணிகள் காத்திருந்து, டிக்கெட் முன்பதிவு செய்யும் நிலை, தற்போது இல்லை.சாதாரண நாட்களில், சராசரியாக, 500 முதல், 750 பேர், சீசன் சமயங்களில், 1,000 பேர் வரை பயணிப்பர். தற்போது, 150 முதல், 200 பேர் பயணிப்பதே அரிதாக உள்ளது.அதே நேரம், திருப்பூரில் இருந்து சென்னை உட்பட பிற மாவட்டங்களுக்கு பயணிப்போரின் கூட்டத்தை விட, பிற மாவட்டம், மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வந்திறங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.அடுத்தடுத்த பல பகுதிகளுக்கு ரயில் இயக்கப்படும் போது, முன்பதிவு செய்யப்படும் பார்சல்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். தற்போது, சென்னை, மயிலாடுதுறைக்கு மட்டும் ரயில் இயக்குவதால், 'பார்சல் புக்கிங்' எதிர்பார்த்தளவில் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X