எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அதிமுக - பாஜ., ஐ.டி. அணி கைகோர்ப்பு: பதிலடி கொடுக்க முடியாமல் திமுக திணறல்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
ADMK, BJP, DMK, அதிமுக, பாஜ, திமுக

சென்னை:சமூக வலைதளங்களில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. தகவல் தொழில்நுட்ப அணியினர் தி.மு.க.விற்கு எதிராக கைகோர்த்து செயல்படுகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் தி.மு.க. திணறி வருகிறது.

சமூக வலைதளங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மட்டுமின்றி அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.கொரோனா தொற்று பரவல் துவங்கிய மார்ச்சில் இருந்து அரசியல் கட்சியினர் வீடுகளில் முடங்கி உள்ளனர். பொதுக்கூட்டங்கள் நடத்த
முடியாததால் சமூக வலைதளங்களில் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியேகூட்டங்களை நடத்தி
வருகின்றனர்.

அனைத்து கட்சி தலைவர்களும் சமூக வலைதளங்களில் சமூக பிரச்னைகள் தொடர்பாக
தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதற்கு எதிர்கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.தற்போதைய சூழலில் தி.மு.க.- - அ.தி.மு.க. - - பா.ஜ. கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் வேகமாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் தினம் ஒரு 'ஹாஸ்டேக்' உருவாக்கி 'டிரெண்டிங்' ஆக்கி வருகின்றனர்.

முன்னர் சமூக வலைதளங்களில் தி.மு.க.வினர் கை ஓங்கி இருந்தது. தற்போது அவர்களுக்கு அ.தி.மு.க.வினரும் பா.ஜ.வினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.தேசிய கல்வி கொள்கை வழியாக ஹிந்தி மொழியை திணிக்க பா.ஜ. முயற்சிப்பதாகக் கூறி 'ஹிந்தி தெரியாது போடா' என்ற ஹாஸ்டேக்கை தி.மு.க. டிரெண்டிங் ஆக்கியது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'தி.மு.க. வேண்டாம் போடா' என்ற ஹாஸ்டேக்கை பா.ஜ.வினர் டிரெண்டிங் ஆக்கினர். இந்த ஹாஸ்டேக்கில் அ.தி.மு.க.வினரும் தி.மு.க.விற்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.தி.மு.க.வினர் பழைய பாணியில் ஹிந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம் எனக் கூற தி.மு.க. பிரமுகர்கள் நடத்தும் சி.பி.எஸ்.சி.
பள்ளிகள் பட்டியலை அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.வினர் வெளியிட்டனர்.

தி.மு.க. -- எம்.பி.க்கள் மத்திய அரசின் கேந்திரவித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க சிபாரிசு செய்த பட்டியலையும் வெளியிட்டனர்.அதேபோல் அ.தி.மு.க.- - பா.ஜ. கூட்டணியினர் கொண்டு வந்த 'நீட்' தேர்வால் தமிழக மாணவ -- மாணவியர் தங்கள் உயிரை பறிகொடுக்கின்றனர் என தி.மு.க.வினர் கூற 'நீட் தேர்வு தி.மு.க.- - காங். கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது' என அ.தி.மு.க.வும் பா.ஜ.வும் பதிலடி கொடுத்தன.

இதுபோல ஒவ்வொரு பிரச்னையிலும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. தகவல் தொழில்நுட்ப
அணியினர் இணைந்து தி.மு.க.வினருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் தி.மு.க.வினர் தடுமாறி வருகின்றனர்.இது தொடர்பாக தி.மு.க. - ஐ.டி. அணி நிர்வாகிகளுக்கும் தி.மு.க.விற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள
'ஐ பேக்' நிறுவனத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-செப்-202004:31:53 IST Report Abuse
J.V. Iyer மக்களுக்கு ஞாபக மறதி அதிகம். இவர்கள் அப்பப்ப மக்களுக்கு நினைவூட்டுகிறார்கள். அவ்வளவே
Rate this:
Cancel
B.KESAVAN - chennai,இந்தியா
15-செப்-202023:29:53 IST Report Abuse
B.KESAVAN இன்றைய இளைஞ்ஜர்கள் சமூகவலைத்தளங்களின் மூலம் திக,மற்றும் திராவிட கழகங்களின் இரட்டை நிலய்ப்பாட்டையும்,தேசத்துரோக செயல்களையும் நன்றாக அறிந்து இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மாரிதாஸ்,அண்ணாமலை,போன்ற படித்த சமூக தொண்டு செய்பவர்களை பின்பற்றி, கீழ்மட்ட விளிம்பு நிலையில்வுள்ள மக்களுக்கும்,கிராமப்புற ஏழைகளுக்கும், எடுத்துக்கூறி அவர்களின் மனதை மாற்ற முயற்சி செய்யவேண்டும்.தமிழகத்தின் எதிர்காலம் இன்றைய இளைஞ்ஜர்கள் கைகளில் நிச்சையம் நல்ல மாற்றம் விரைவில் வரும்.உண்மையான உழைப்பாளிக்கு உன்னதமான ஏற்றத்தை அடைய வழி செய்யவேண்டும்.
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
15-செப்-202011:41:30 IST Report Abuse
S.P. Barucha படிப்பதற்கே கேவலமாக உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X