பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

வாகனம் மோதி பலிபெரியகுளம்: பெரியகுளம் முருகமலை நகரைச் சேர்ந்தவர் விவசாய தொழிலாளி பெரியகருப்பன் 50. இவர் எ.புதுப்பட்டியில் ரோட்டை கடந்து செல்லும் போது, தேவதானப்பட்டியிலிருந்து, பெரியகுளம் நோக்கி சென்ற மினிவேன் மோதியது. அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் பெரியகருப்பன் இறந்தார். திண்டுக்கல் வக்கம்பட்டி டிரைவர் மரியராஜேஷ்சை, வடகரை எஸ்.ஐ., ஈஸ்வரன் கைது செய்தார்.ஆயில் மில்லில் திருட்டுஆண்டிபட்டி: ஆண்டிபட்டி கோட்டை கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் தினேஷ், ஆயில் மில் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு மறுநாள் காலை அவரது தந்தை செல்வம் கடைக்கு வந்தார். கடையில் தகர மேற்கூரையை பிரித்து, மேஜையை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கம்ப்யூட்டர் திருடி சென்று விட்டனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.மது விற்ற பெண் கைதுகூடலுார்:- கூடலுார் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார்கள் லோயர்கேம்பில் ரோந்து சென்றனர். காஞ்சிமரத்துறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த வனிதா 52,வை கைது செய்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 4 நாட்களாக போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்வது தொடர்ந்துள்ளது.புதிய தமிழகம் ரோடு மறியல்தேனி: -புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் ராஜலிங்கம். இவரை செப்., 12ல், வெட்டி கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி தேனி நேரு சிலை அருகே ரோடு மறியல் நடந்தது. மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமையில், மாநிலப் பொறுப்பாளர் பாலசுந்தரராஜ், போடி தொகுதி செயலாளர் நாகேந்திரன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். டி.எஸ்.பி., ரமேஷ் தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.பேனர் எரிப்பு: மூவர் கைதுதேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி தெற்குதெருவில் தலைவர் ஒருவரின் பேனர் இருந்தது. இதன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. தேனி எஸ்.பி., சாய்சரண்தேஜஸ்வி, டி.எஸ்.பி., முத்துக்குமார் விசாரித்தில் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் 20, இவரது நண்பர்கள் ஜவஹர் 20, மணிகண்டன் 20 ஆகியோரை தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X