பொது செய்தி

தமிழ்நாடு

அவரைக்கு, அடடே விலை இருந்தும் பலனில்லை!

Added : செப் 14, 2020
Share
Advertisement

பொங்கலுார்:தொடர் மழையால், அவரை விலை, மும்மடங்கு உயர்ந்துள்ளது.பொங்கலுார் சுற்றுவட்டார பகுதிகளில், செடி அவரை சாகுபடியில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த அவரை, தற்போது அறுவடை செய்யப்படுகிறது. ஒரு வாரம் முன்பு வரை, அவரை கிலோ, 17 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர் மழையால், அவரை விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை, 'கிடுகிடு'வென உயர்ந்து, தற்போது, கிலோ, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், 'மழையால் பூ உதிர்ந்ததால், உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. நடவு செய்த இரண்டாவது மாதத்தில், அறுவடைக்கு தயாராகும்; நான்காவது மாதம் காய்ப்பு நின்று விடும். ஆனால், இம்முறை, காய்ப்புக்கு வந்த உடனேயே உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விலை உயர்ந்தும், விளைச்சல் குறைவால், பெரியளவில் லாபம் இருக்காது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X