பொது செய்தி

தமிழ்நாடு

கமகமக்கும் கருவாட்டு ஊறுகாய் ; சுயதொழிலில் சாதிக்கும் அகதிகள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

விருதுநகர் : சுயதொழில் என்பது லட்சியங்களை கொண்டவர்களால் உருவாக்கப்படும் சிறு பொருளாதார கட்டமைப்பு. கொரோனாவால் பாதித்த பொருளாதாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுப்பது இந்த சுயதொழில்கள் தான்.

எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படி தான் வாழ வேண்டும் என தன்னம்பிக்கை சிறகுகளால் பலர் விருதுநகரில் சுயதொழிலில் சாதித்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வுகள் அதிகரித்தும் வரும் நிலையில் யாரும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் சுயதொழில், பணி தேடுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் விரைவில் பொருளாதார நடவடிக்கைகளும் மேலோங்க வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் விருதுநகரில் இருந்து அருப்புக் கோட்டை செல்லும் வழியில் பாலவனத்தம் அருகே இலங்கை அகதி முகாமை சேர்ந்த குமாரதேவன் கூழ் கடை நடத்தி வருகிறார்.

இவர் கடையில் கம்மங்கூழுடன் கருவாட்டு ஊறுகாய் மவுசு. மனைவி கனகா, அத்தை மீனாட்சியம்மாள் கைப்பக்குவத்தில் தயாராகிறது. இவர்கள் 1991ல் இலங்கையில் இருந்து குல்லுார்சந்தை அகதிகள் முகாமில் குடியேறினர். 5 ஆண்டுகளுக்கு முன்பு கூழ் கடை துவங்கினர். கூழ் கடையில் வகை வகையான நொறுக்கு தீனிகள் இருக்கும். ஆனால் ஊறுகாய் மட்டும் எடுத்து கொள்ளமாட்டார்கள். அதை மாற்றும் வகையில் கருவாட்டில் ஊறுகாய் செய்ய திட்டமிட்டார் மீனாட்சியம்மாள். பொடி கருவாடு வகைகளை வாங்கி தக்காளி தொக்கு போல் செய்து சுவையான ஊறுகாயாக தயாரிக்கிறார். ஒரு முறை கூழ் குடித்து கருவாட்டு ஊறுகாயை ருசி பார்ப்பவர்கள் ரூ.60 மதிப்புள்ள ஊறுகாய் பாட்டிலை வாங்கி செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X