சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காற்றுக்கு சாய்ந்தது மரம்: மின்வெட்டு துண்டிப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருப்பூர்:பலத்த காற்றுக்கு மரம் விழுவதும், மின் இணைப்பு துண்டிக்கப்படுவதும் தொடர்கிறது.திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில், சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், ஆங்காங்கே மரங்கள் சாய்கின்றன.நேற்று முன்தினம் இரவு வீசிய சூறைக்காற்றில், திருப்பூர் - காங்கயம் ரோடு, அமர்ஜோதி கார்டன் மெயின்ரோட்டில் உள்ள வாகை மரம், வேருடன் சாய்ந்தது.மரக்கிளை, மின்கம்பி மீது விழுந்ததில், அருகில் இருந்த மின்கம்பமும் சாய்ந்தது. இதனால், அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது; போக்குவரத்தும் தடைபட்டது.அமர்ஜோதி நுழைவாயில் பகுதியில், 'பேரிகார்டு' வைக்கப்பட்டு, போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. நேற்று காலை, மாநகராட்சி பணியாளர்கள், மரத்தை வெட்டி, வாகனத்தில் எடுத்து சென்றனர். மின்வாரிய ஊழியர்கள், சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X