பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கையை மீட்டெடுக்கும் பட்டதாரி

Added : செப் 14, 2020
Share
Advertisement

காரியாபட்டி : எண்ணற்ற விஷயங்களை இயற்கைக்கு மாறாக உருவாக்குவதன் விளைவாக பல்வேறு பாதிப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

காய்கறிகள், பழங்கள், உணவு வகைகள் என அனைத்திலும் வீரிய ஒட்டு ரக விதைகளை உற்பத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாகி எண்ணற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையை அனுபவித்து நொந்து போன மக்கள் இயற்கைக்கு மாறத் தொடங்கி விட்டனர். இது போன்ற நேரத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இயற்கையான உணவு வகைகளை உற்பத்தி செய்ய பலர் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதற்கான ஆதரவை மக்கள் கொடுத்து வருவதும் ஒரு வகையில் வரவேற்க கூடியதே.

தற்போதைய இளைஞர்கள் கூட இயற்கை தேடல்களில் இறங்கியிருப்பதோடு இயற்கையான பொருள்களை உற்பத்தி செய்யும் முயற்சியிலும் இறங்கியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. அந்த வகையில் டிப்ளமோ முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த காரியாபட்டியை சேர்ந்த சரவணக்குமார் இயற்கை விவசாயம் மீதான ஆர்வத்தால் வேலையை விட்டுவிட்டு பாரம்பரிய காய்கறிகளை உருவாக்கம் செய்ய நாட்டு விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்.

தனது நிலத்தில் பருத்தி சாகுபடி செய்யும் இவர் பாரம்பரிய நாட்டு விதைகளை கொண்டு கீரை வகைகள், கொத்தமல்லி, கொத்தவரங்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். நாட்டு விதைகளை சேகரித்து வழங்கி வருவதோடு வெப்ப நிலை மாற்றத்தை ஏற்படுத்தும் மரக்கன்றுகளை உருவாக்க நர்சரி கார்டனும் நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X