பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை 'நபார்டு' நிதி ஒதுக்கீடு

Added : செப் 14, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி, நடுவச்சேரி, கருக்கன்காட்டுப்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், அதிகளவு மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.நபார்டு திட்டத்தின் கீழ், கூடுதலாக, 6 வகுப்பறை கட்டடம் மற்றும் ஆய்வக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்கான, பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடந்தது. முன்னதாக, பள்ளி தலைமையாசிரியர் திருவேங்கடசெல்வி, வரவேற்றார். நடுவச்சேரி ஊராட்சி தலைவர் வரதராஜன், தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் வரதராஜன், முத்துசாமி, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'நடப்பாண்டு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க துவங்கியுள்ளது. இத்தகைய சூழலில், புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்படுவதன் மூலம், பள்ளியின் வளர்ச்சி மேம்படும்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X