பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றோரம் எம்ப்ராய்டரி கழிவு: கண்டும் காணாமல் அதிகாரிகள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருப்பூர்:நொய்யலாற்றோரம், எம்ப்ராய்டரி கழிவு கொட்டப்படுகிறது.திருப்பூர் சுற்றுப்பகுதியில், ஏராளமான எம்ப்ராய்டரி நிறுவனங்கள் உள்ளன. அதிநவீன மெஷின் பயன்படுத்தி, ஆடைகளில், அழகிய வடிவம் பொறிக்கப்படுகிறது. ஆடைகளில், நேர்த்தியாக எம்ப்ராய்டரி வேலைபாடு செய்வதற்காக, 'போம்' பயன்படுத்தப்படுகிறது.
எம்ப்ராய்டரி செய்து முடித்தபின், அவை, கழிவாக வெளியேறும்.பெரும்பாலான நிறுவனங்கள், எம்ப்ராய்டரி கழிவை முறையாக அகற்றுவதில்லை. நீர்நிலை, ரோட்டோரம் அவற்றை கொட்டுகின்றனர். கொரோனா ஊரடங்கின் போது, நிறுவனங்கள் இயங்காததால், எம்ப்ராய்டரி கழிவுகள் கொட்டப்படுவது, தவிர்க்கப்பட்டிருந்தது.நிறுவனங்கள் மீண்டும் இயங்க துவங்கியுள்ளதையடுத்து, எம்ப்ராய்டரி கழிவு கொட்டப்படுவதும் அதிகரிக்க துவங்கியுள்ளது. காலேஜ்ரோடு, அணைக்காடு அருகே, நொய்யலாற்றோர பகுதியில், எம்ப்ராய்டரி கழிவு கொட்டப்படுகின்றன.வெள்ளை நிறத்தில் பஞ்சு போல காணப்படும் இவை, ஆற்று நீரில் கலந்தும், மண்ணில் புதைந்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. இந்நிறுவனங்கள் மீது, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே நேரம், அனைத்து வகை கழிவுகளையும் மறுசுழற்சி செய்ய முடியும் என்ற நிலையில், எம்ப்ராய்ட்ரி துறையினர் 'போம்' கழிவை மறுசுழற்சி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X