பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., வாய்க்கால் 'மாயம்' :பாசன விவசாயிகள் புகார்

Added : செப் 14, 2020
Share
Advertisement

பல்லடம்:பல்லடம் அருகே, பி.ஏ.பி., கிளை வாய்க்கால், பல அடி துாரத்துக்கு மாயமாகி உள்ளதாக, பாசன விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.பல்லடம் ஒன்றியம், பூமலுார் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிபாளையம் வழியாக, பி.ஏ.பி., பிரதான மற்றும் கிளை வாய்க்கால் செல்கிறது. இங்குள்ள, 22ம் எண் கொண்ட பி.ஏ.பி., கிளை வாய்க்கால் மாயமாகி உள்ளது என, அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது;பி.ஏ.பி., வாய்க்கால் மூலம், பல நுாறு ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகின்றன. சமீபத்தில், 22ம் எண் கொண்ட கிளை வாய்க்காலை, சிலர் சுயநலத்துக்காக மண் கொட்டி மூடியுள்ளனர். தண்ணீர் செல்லும் பாதையில், 4 அடி அகல குழாய் பதித்து, ஒன்றரை கி.மீ., துாரத்துக்கு வாய்க்கால் மூடப்பட்டுள்ளது.வாய்க்கால், திறந்த நிலையில் இருந்தால் மட்டுமே, அங்கு குப்பை கொட்டப்படும் போது, அவற்றை அகற்ற முடியும்; அடைப்பு ஏற்படும் போது, சரிசெய்ய முடியும். ஒன்றரை அடி குழாயில், பாசன நீர் வழிந்தோடி செல்ல வாய்ப்பில்லை. வாய்க்கால் மூடப்பட்டுள்ளதால், பாசன நிலங்களுக்கு தண்ணீர் கேள்விக்குறியாகியுள்ளது.சமீபத்தில்தான், பல லட்சம் ரூபாய் செலவில், அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், வாய்க்கால் துார்வாரப்பட்டது. எனவே, வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X