பொது செய்தி

தமிழ்நாடு

எடையும் குறைவு உட்கார்ந்தாலே சொகுசு நீடித்து உழைக்கும் மூங்கிலுக்கு தனி மவுசு

Added : செப் 14, 2020
Share
Advertisement

சிவகாசி : எடை குறைவான, உட்காரவும் வசதி உடைய மூங்கில் சோபாக்களை தற்போது மக்கள் அதிகளவில் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

மூங்கில் சேர், சோபாக்களில் சூடு ஏறாது. இதனாலே இதன் தேவையும் அதிகரித்துள்ளது. இவைகள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதால் மவுசும் கூடுகிறது. இதை திருத்தங்கல் போலீஸ் செக் போஸ்ட் அருகே அகரன் கேரளா கேன் ஒர்க்ஸ் என்ற பெயரில் மூங்கில் பொருட்கள் தயாரிக்கும் கடை நடத்தி வரும் செந்தில்குமார் மூங்கில் பிரம்பால் ஆன சேர், சோபா, ஊஞ்சல், கட்டில், குழந்தை ஊஞ்சல், டீப்பாய், மூங்கில் ஸ்கிரீன் போன்றவை தயாரித்து விற்கிறார். பிறந்த குழந்தை சொகுசாக படுப்பதற்காக ஊஞ்சல் தொட்டி இங்கு கிடைக்கிறது.

இதன் ஊஞ்சல் காற்றோட்டமாக இருப்பதால் குழந்தைகளுக்கும் ஏற்றதாகவும் உள்ளது. மூங்கில் பொருட்களை குறைந்தது 35 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. தயாரிக்கும் இடத்திலேயே இப்பொருட்கள் கிடைப்பதால் விலையும் குறைவாக கிடைக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X