பொது செய்தி

தமிழ்நாடு

அடிகுழாய்கள் 'அவுட்'; தெருவிளக்குகள் 'புஸ்'

Added : செப் 14, 2020
Share
Advertisement

விருதுநகர் : செயல்படாத சுகாதார வளாகம், துார்ந்து போன அடிகுழாய்கள், தொடரும் சாக்கடை அடைப்பு, கொசுத்தொல்லை, எரியாத தெருவிளக்குகள் என்பன உள்ளிட்ட குறைபாடுகளால் விருதுநகர் ஆத்துமேடு மக்கள் பரிதவிக்கின்றனர்.

இப்பகுதியின் குடியிருப்பை யொட்டி கவுசிகா நதியில் சேரும் நீர்வரத்து ஓடை செல்கிறது. இதில் குப்பை தேங்கி பெரும் துர்நாற்றம் ஏற்படுகிறது. கொசுத்தொல்லை அதிகமாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் அச்சுறுத்தல் உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி திறந்த நிலையில் உள்ளதால் தெருவோரம் விளையாடும் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பொது சுகாதார வளாகம் இரண்டு இருந்தும் ஒன்று மட்டுமே செயல்படுவதால் திறந்தவெளியை நாடுகின்றனர். இங்குள்ள 5 அடிகுழாய்களும் பழுதாகி துார்ந்து கிடக்கிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை ஆகிறது. தெருவிளக்குகளும் முறையாக எரிவதில்லை.

இரவில் வீடு திரும்புவோர் சிரமப்படுகின்றனர்.தீர்வு வேண்டும்நீர்வரத்து ஓடை கழிவுநீர் ஓடையாகி விட்டது. ஆழமான இந்த ஓடையில் கழிவுகள் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. நகராட்சி அதிகாரிகள் அடைப்புக்கு தீர்வு காண வேண்டும்.செல்வராஜ், காவலாளி.குப்பையை எரிப்பதால் மாசு ஆத்துமேடு நகராட்சியின் எல்லை பகுதியாக உள்ளதால் பிற பகுதியினர் இங்கு வந்து குப்பை கொட்டி செல்கின்றனர். நகராட்சி நிர்வாகமோ குப்பையை அள்ளாது தீ வைக்கின்றனர். இதனால் எங்கள் பகுதியில் மாசு ஏற்படுகிறது. பால்தாயி, குடும்பத்தலைவிநடவடிக்கை உண்டுஅடிகுழாய்கள் விரைவில் சீரமைக்கப்படும். வீடுகளில் தனிநபர் கழிப்பறை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.பார்த்தசாரதி, நகராட்சி கமிஷனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X