பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ., தங்கவேல் மறைவு:மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில், பொதுமக்களும், கட்சியினரும் அஞ்சலி

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருப்பூர்:முன்னாள் எம்.எல்.ஏ., தங்கவேல் மறைவுக்கு, மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில், பொதுமக்களும், கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., தங்கவேல், கொரோனா தொற்றால், உயிரிழந்தார். அவரது உடல், திருப்பூர் எடுத்துவரப்பட்டு, ஆத்துப்பாளையம் லயன்ஸ் அறக்கட்டளை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவர், மா.கம்யூ., கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். அவரது மறைவுக்கு, மா.கம்யூ., கட்சி மாவட்ட அலுவலகத்தில், இரங்கல் கூட்டம் நடந்தது. அவரது படத்துக்கு மலர் துாவி, கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X