சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்னந்தடுக்கு பின்னும் பணி தீவிரம்! மாநிலம் முழுவதிலும் தேவை அதிகரிப்பு

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020
Share
Advertisement

ஆனைமலை:தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளால், தென்னந்தடுக்கு விற்பனை சூடு பிடித்து, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் இருந்து மாநிலம் முழுவதிலும் விற்பனைக்காக தடுக்கு அனுப்பப்படுகிறது.பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், தென்னை மரத்தில் இருந்து வீணாகும் ஓலையில் தடுக்கு தயாரிக்கப்படுகிறது. வெயிலை சமாளிக்க வீட்டின் மேற்கூரை அமைக்க, குடிசை அமைக்க, சுப நிகழ்ச்சிகள், கோழிப்பண்ணை, டீ எஸ்டேட், வெங்காயம் சாகுபடிக்கு மறைப்பு அமைக்க, தென்னந்தடுக்கு பயன்படுகிறது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தயாராகும் தென்னந்தடுக்கு, தஞ்சை, நாகப்பட்டிணம், திருவாரூர், சீர்காழி, சிதம்பரம், பெரம்பலுார், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கும்; செங்கல் சூளைகளுக்காக கேரளாவுக்கும் அனுப்பப்படுகிறது.முழு ஊரடங்கால், மார்ச் மாதம் முதல் தென்னந்தடுக்கு விற்பனைக்கு அனுப்புவதில், 'இ- பாஸ்' பெறுவது, மாவட்டங்களை கடந்து செல்வது என, பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு, வர்த்தகம் பாதித்தது. இந்நிலையில், அரசு ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்திய பின், கடந்த, 20 நாட்களாக தென்னந்தடுக்கு தொழில் மீண்டும் சூடு பிடித்துள்ளது. ஆனைமலை தென்னந்தடுக்கு விற்பனையாளர்கள் கூறியதாவது:பந்தல் அமைக்கவும், கோழிப்பண்ணைகளுக்காக தென்னந்தடுக்கு தேவை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில் இருந்து தினமும், எட்டாயிரம் தடுக்குகள் வீதம், 15 லோடு தென்னந்தடுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், தென்னை ஓலை சீசன் இல்லாததால், தடுக்கு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. ஊரடங்கின் போது தடுக்கு தேவை குறைந்து, விற்பனை செய்யவும் வழியின்றி தொழில் பாதித்தது.

மார்ச் முதல் ஆக., வரையில், ஆயிரம் தடுக்குகள், ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது, தேவை அதிகரிப்பு, உற்பத்தி குறைவால், ஆயிரம் தடுக்குகள், 5,500 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.இதனால், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கணிசமாக லாபம் கிடைக்கிறது. மழையால் தென்னையில் வெள்ளை ஈக்கள் பாதிப்பு குறைந்து, ஓலைகள் கருப்பு நிறமாக மாறுவது குறைந்து, தடுக்குகளின் தரமும் உயர்ந்துள்ளது. ஊரடங்கு தளர்வுக்குப்பின் தென்னந்தடுக்கு தொழில் மீண்டும்சூடுபிடித்துள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X