தொற்றுக்கு வீட்டிலேயே சிகிச்சை: பராமரிப்பு பெட்டகம் இருப்பு வைப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், 'கொரோனாவுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கும், பராமரிப்பு பெட்டகம்' 2,000 இருப்பு வைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானவர்களை, அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது.அவ்வகையில், 80க்கும் மேற்பட்டோருக்கு, டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டும், அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு, 2,500 ரூபாயில், 14 நாட்களுக்கு, ஒரே தொகுப்பாக, கொரோனாவுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கும், பராமரிப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 2,000 எண்ணிக்கையில், பராமரிப்பு பெட்டகம் தருவிக்கப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டு, வீட்டில் இருந்து, சிகிச்சை பெற விருப்பம் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'வீட்டில் இருந்து சிகிச்சை பெற பலரும் ஆர்வம் காட்டுவதால், கொரோனாவுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கும், பராமரிப்பு பெட்டகம் தருவிக்கப்பட்டுள்ளது. தீவிர நோய் அறிகுறி கண்டறியப்பட்டால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து, கண்காணிக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X