பொது செய்தி

தமிழ்நாடு

குற்ற சம்பவங்கள் கண்டறிய 9 கண்காணிப்பு கேமராக்கள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:நெகமம் அருகேயுள்ள கப்பளாங்கரை ஊராட்சியில், திருட்டு சம்பவங்களை கண்டறிய ஒன்பது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.நெகமம் அருகேயுள்ள கப்பளாங்கரை, தேவணாம்பாளையம், சிறுக்களந்தை, சேரிபாளையம், ஆண்டிபாளையம், குளத்துப்பாளையம், வடசித்துார் கிராமங்களில் அடிக்கடி திருட்டு நடக்கிறது.இதனை கட்டுப்படுத்த, கண்காணிப்பு கேமரா பொருத்த கோவை எஸ்.பி., அருளரசு நெகமம் போலீசாருக்கு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து, கப்பளாங்கரை ஊராட்சியில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்களிப்பு தொகை, 1.40 லட்சம் ரூபாய் செலவில், வடசித்தார் ரோடு, தேவணாம்பாளையம், சிறுக்களந்தை, குருவேகவுண்டன்பாளையம், நெகமம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் ரோட்டிலும், பஸ் ஸ்டாப், ஆலமரத்து விநாயகர் கோவில் உட்பட ஒன்பது இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதனை, பொள்ளாச்சி டி.எஸ்.பி., சிவக்குமார் துவக்கி வைத்தார். நெகமம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஊராட்சி தலைவர் தேவி மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X