பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறை வாக்காளர்களுக்கு 'பார் கோடு' அடையாள அட்டை

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஆனைமலை:தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 'பார் கோடு' வசதியுடன் வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளது. இதனை, வால்பாறை சட்டசபை பகுதிகளில், வாக்காளர்களுக்கு வினியோகிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனைமலை தாலுகா அதிகாரிகள் கூறியதாவது:'பார் கோடு' வசதியுடன் உள்ள வாக்காளர் அடையாள அட்டையில், முன்பிருந்த, 14 இலக்க எண்ணுக்கு பதிலாக, 10 இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது.வால்பாறை சட்டசபை பகுதிகளில், 52,100 பேருக்கும், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், புதியதாக அட்டை கேட்டு பதிவு செய்த, 5,600 பேருக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை வந்துள்ளன.ஆனால், பழைய அட்டையிலுள்ள புகைப்படம் தான் இடம்பெற்றிருக்கும். மக்கள் தற்போதைய புகைப்படத்துடன், தாலுகா அலுவலகம் வந்தோ அல்லது 'ஆன்லைன்' வாயிலாகவோ பதிவு செய்தால், விரைவில் மாற்றம் செய்து தரப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.மக்கள் கூறுகையில், 'தேர்தல் ஆணையம், பழைய வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றாக, புதிய அட்டை வழங்க திட்டமிட்டபோதே, மக்களிடம் தற்போதைய புகைப்படத்தை பெற்று அட்டை வழங்கியிருக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X