பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலை விரிவாக்கம் மறு வாழ்வு பெற்ற மரங்கள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலையில், ரோடு விரிவாக்கம் காரணமாக, மறு நடவு செய்யப்பட்ட மரங்கள் மீண்டும் மறு வாழ்வு பெற்றுள்ளன. நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக, அகற்றப்பட்ட மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், தன்னார்வ அமைப்புகள் சார்பில், மறுநடவு செய்யப்பட்டது.கடந்த ஜூன் மாதம், கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை நகரப்பகுதியில், ரோடு விரிவாக்கப்பணிகள் நடந்தன. அப்போது, கொழுமம் ரோடு சந்திப்பு அருகே, விரிவாக்கப்பணிகளுக்காக, பல ஆண்டுகளாக வளர்ந்திருந்த, மரங்கள் வெட்டப்படும் நிலை ஏற்பட்டது.இந்த மரங்களை காக்கும் வகையிலும், மறு வாழ்வு அளிக்கும் வகையில், தன்னார்வ அமைப்புகள் சார்பில், வெட்டப்பட இருந்த மரங்கள் வேருடன் எடுக்கப்பட்டு, உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், மரங்கள் மறு நடவு செய்யப்பட்டன. தற்போது, அவை துளிர்விட்டு, நன்கு வளர்ந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X