பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு கூடத்தை சேதப்படுத்திய யானைகள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறை அருகே சத்துணவு கூடத்தை சேதப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.வால்பாறையில் பருவமழைக்குப்பின், யானைகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.பகல் நேரத்தில் எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிடும் யானைகள், இரவு நேரத்தில் எஸ்டேட்டில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதி, ரேஷன்கடைளை இடித்து உள்ளிருக்கும் பொருட்களை உட்கொள்கின்றன.மேலும், அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்களை உட்கொள்கின்றன. இதனால் தொழிலாளர்கள் நிம்மதி இன்றி தவிக்கின்றனர். இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளிக்கு நேற்று முன்தினம் இரவு, கூட்டமாக சென்ற யானைகள் பள்ளி சத்துணவு கூடத்தை இடித்து, பொருட்களை வெளியே இழுத்து சேதப்படுத்தின.தகவலறிந்த, வனவிலங்கு - மனித மோதல் தடுப்பு குழுவினர், வனவர் முனியாண்டி தலைமையில், ஒரு மணி நேரம் போராடி, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், யானைகள் தனித்தனி கூட்டமாக குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இதனால், இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க முடியாமல் வனத்துறையினர் அலைமோதுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X