பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுக்களுக்கு இ-சக்தி இணையதளம்: கடனுதவி பெறுவது எளிமையாகிறது

Added : செப் 14, 2020
Share
Advertisement

உடுமலை:மகளிர் திட்டத்தில், மகளிர் குழு உறுப்பினர்களுக்கு, கடனுதவி வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்த, இ-சக்தி இணையதள இணைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மகளிர் திட்டத்தின் சார்பில், ஆதரவற்ற மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கென குழுக்கள் அமைக்கப்படுகிறது. குழுவினருக்கு, கடனுதவி மற்றும் செய்தொழில், வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மகளிர் குழுவினரின் மூலம் தயாரிக்கப்படும் கைவினைப்பொருட்களை, விற்பனை செய்வதற்கும், அவர்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தவும், இ-மதி எனப்படும் இணையதளம் செயல்படுத்தப்பட்டது.இந்த இணையதளத்தில், ஒவ்வொரு குழுவினரும் பெறும் கடனுதவி, செலவினங்கள், செய்தொழிலில் அடைந்துள்ள லாபம், வங்கிக்கு செலுத்தியுள்ள கடன் தொகை, குறித்த அனைத்து விபரங்களும், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்படுகிறது.இதன் மூலம், மாநில அளவில், மகளிர் திட்டத்தின் சார்பில், குழுவிலுள்ள ஒவ்வொருவரின் பண பரிவர்த்தனையும் அதிகாரிகள் நேரடியாக கண்காணித்துக்கொள்ள முடியும். வரவு செலவு கணக்குகளை பார்வையிடலாம்.குழுக்களை தரமதிப்பீடு செய்வதற்கு, உறுப்பினர்களை நேரடியாக அழைத்து, பின்னர், கடனுதவி வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். நபார்டு வங்கியின் மூலம், மகளிர் குழுவினரின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.இந்த செயல்முறைகளால் குழுவினர் கடனுதவி பெறுவதற்கான நேரமும் அதிகமாகிறது. இதனை எளிமைப்படுத்தும் முறையில், இ-சக்தி எனப்படும் இணையதள முகவரியை நபார்டு வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.இதில், இ-மதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் குழுவினரின் வரவு செலவு கணக்குகள் அடிப்படையில், இ-சக்தி இணையதளத்தில், குழுவினருக்கான தரமதிப்பீடு வழங்கப்படுகிறது.தரமதிப்பீடு அடிப்படையில், நபார்டு வங்கியின் மூலம், கடனுதவி வழங்குவது குறித்தும், உடனடியாக, இதில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், இனி, மகளிர் குழுவினர், உரிய காரணங்களாக கடனுதவி பெறுவது எளிமையாகும் என, மகளிர் திட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X