பொது செய்தி

தமிழ்நாடு

18 ஆயிரம் குடும்பங்களுக்கு எதிர்ப்பு சக்தி மாத்திரை 'கிட்'

Added : செப் 14, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறை நகராட்சியில், முதல் கட்டமாக, 18 ஆயிரம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் அடங்கிய 'கிட்' வழங்கப்படுகிறது.வால்பாறை நகராட்சியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நகராட்சி சார்பில் வால்பாறை நகரின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கைகழுவி செல்லும் வகையில், சானிடைசருடன் தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதல்கட்டமாக, 18 ஆயிரம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் அடங்கிய 'கிட்' ரேஷன் கடைகளில் வழங்கும் பணி துவங்கியது.நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ் கூறுகையில், ''கொரோனா பரவலை தடுக்க, நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கடைகள் வாயிலாக, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் அடங்கிய 'கிட்' வழங்கப்படுகிறது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கட்டாயம், 'மாஸ்க்' அணிந்து செல்ல வேண்டும். வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X