சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வலசை வந்த சாம்பல் வாலாட்டி பறவைகள்: வால்பாறையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வ

Added : செப் 14, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறைக்கு வந்துள்ள, சாம்பல் வாலாட்டி பறவைகளை இயற்கை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறையில் எண்ணற்ற பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பருவமழைக்குப்பின் கடும் குளிர் நிலவுவதால், வெளிநாடுகளில் இருந்து பறவைகள் அதிகளவில் வர துவங்கியுள்ளன.இதுகுறித்து, வால்பாறை அடுத்துள்ள சின்கோனா பள்ளி ஆசிரியரும், பறவை ஆராய்ச்சியாளருமான செல்வகணேஷ் கூறியதாவது:பூமியின் வட பகுதியில் கடும் குளிர் நிலவும் காலங்களில், பறவைகள் இரைதேடி தெற்கு நோக்கி பயணிக்கின்றன. இதை வலசை போதல் என்பர். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்., மாதங்களில் இந்தியாவில் பல விருந்தாளி பறவைகளை காணலாம். சுமார், ஏழு மாதங்களுக்கு பின், மார்ச், ஏப்ரல் மாதங்களில் மீண்டும் வடக்கு நோக்கி இனப்பெருக்கம் செய்ய இந்த பறவைகள் பயணிக்கின்றன.நம்ம ஊரில், கூடு கட்டும் பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வருவது அல்ல. நம்ம ஊரில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வதால் அவற்றை உள்ளூர் பறவைகளாக கருத வேண்டும்.ஆனால், உலகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தொலை துாரம் பயணித்து, வால்பாறை வந்து தங்கி, மீண்டும் எங்கிருந்து வந்ததோ அங்கேயே செல்லும் பறவைகள் தான் வலசை பறவைகள்.தென் மாநிலங்களில், பரவலாகக் காணப்படும் ஒரு விருந்தாளி பறவை சாம்பல் வாலாட்டியாகும். மலைப்பாங்கான இடங்களிலும் நீர்நிலைகளிலும், சாலையோரங்களிலும் இந்த பறவைகளை காணலாம். இந்த பறவை எப்போதும் தனது வாலை, மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு சுறுசுறுப்பாக இரை தோண்டும்.இமய மலைப்பகுதிக்கு வெகு தொலைவிலிருந்து வரும் இந்த பறவைகள், இங்குள்ள பூச்சிகளை உட்கொண்டு நமது சூழலை காக்கின்றன. இதுமட்டுமின்றி தகைவிலான், நீலவால், பஞ்சுருட்டான் போன்ற பறவைகளும், பலவிதமான நீர் பறவைகளும் தென் மாநிலத்துக்கு வந்து செல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து மேற்கு தொடர்ச்சிமலையில், அமைந்துள்ள வால்பாறைக்கு வரும் பறவைகள் குறித்து பரவலாக ஆய்வு செய்து வருகிறோம். பறவைகளை பாதுகாக்க மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X