சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்து தடுக்க ஒளிபிரதிபலிப்பான் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நடவடிக்கை

Added : செப் 14, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் சுங்கத்தில் இருந்து, வளந்தாயமரம் ரோட்டில், விபத்துகளை தடுக்க மரங்களில், இரவு நேரத்தில் விபத்தை தவிர்க்க, ஒளிபிரதிபலிக்கும் 'ரிப்ளெக்டிங் பிளேட்' ஒட்டப்பட்டது.பொள்ளாச்சி - மீன்கரை ரோடு; அம்பராம்பாளையம் சுங்கம் - வளந்தாயமரம் ரோட்டில் இருபக்கங்களிலும் மரங்கள் அதிகளவு உள்ளன. ஏற்ற இறக்கமாகவும்; வளைவுகள் மிகுந்தும் உள்ளன. வளந்தாயமரம் ரோட்டில், கேரள மாநிலத்துக்கு காய்கறி வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு கனரக சரக்கு வாகனங்கள் செல்கின்றன.மேலும், ஆனைமலை ரோட்டில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகளவு வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த ரோடுகளில் விபத்துகளை கட்டுப்படுத்த, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், 'ரிப்ளெக்டிங் பிளேட்' (ஒளி பிரதிபலிப்பான்) மரங்களில் ஒட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ.,) முருகானந்தம் தலைமை வகித்தார். தாசில்தார் வெங்கடாச்சலம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவுசல்யா முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாஸ்கர், ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது:பொள்ளாச்சி பகுதியில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில், விபத்துகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒரு கட்டமாக, ஆனைமலை ரோட்டில் சுப்பேகவுண்டன்புதுார் - தாத்துார் வரையும்; அம்பராம்பாளயைம் - வளந்தாயமரம் செல்லும் ரோட்டிலும், 'ரிப்ளெக்டிங் பிளேட்' ஒட்டப்பட்டுள்ளது.ஏற்ற, இறக்கமாகவும், வளைவு பகுதியிலும், அதிவேகமாக வரும் வாகனங்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகிறது. இதனை தடுக்க, ரோட்டின் விளிம்பு பகுதியை அடையாளப்படுத்த, ரோட்டின் இருபக்கமும் உள்ள, மரங்களில் ஒளிபிரதிபலிப்பான் ஒட்டப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஆயிரம் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, விபத்துகள் நடைபெறும் அனைத்து சாலைகளிலும் ஒட்டப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X