பொது செய்தி

இந்தியா

திருமணத்துக்கு விடுமுறை எடுக்காத பெண் உதவி கமிஷனருக்கு பாராட்டு

Updated : செப் 15, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
திருமணம், விடுமுறை, உதவி கமிஷனர், பாராட்டு

கவுஹாத்தி:கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த உதவி கமிஷனர், விடுமுறை எடுக்காமல், மணமகனை தன் வீட்டுக்கு வரவழைத்து திருமணம் செய்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தடுப்பு பணிவடகிழக்கு மாநிலமான அசாமின், கோச்சார் மாவட்ட உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர், கீர்த்தி ஜாலி. ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கீர்த்திக்கும், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஆதித்ய சசிகாந்த் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணத்தை, கீர்த்தியின் சொந்த ஊரான, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோச்சார் மாவட்டத்தில், சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதற்கான தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த கீர்த்தி, திருமணத்துக்கு ஐதராபாதுக்கு வர முடியாது என, பெற்றோரிடம் தெரிவித்தார். பாராட்டுஅதற்கு பதிலாக, அசாமில், தான் பணியாற்றும் சில்சார் நகருக்கு வரும்படி, மணமகனுக்கு அழைப்பு விடுத்தார். இதையேற்று மணமகனும், அவரது உறவினர் சிலரும், சில்சார் நகருக்கு வந்தனர்.

கீர்த்தியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், அவர்கள் வரவில்லை. அவரது சகோதரி மட்டும் வந்திருந்தார். உடன் பணியாற்றுவோருக்கு கூட அழைப்பு விடுக்காமல், விடுமுறை எடுக்காமல், சில மணி நேரம் மட்டும் அனுமதி பெற்று, திருமணத்தில் பங்கேற்றார், கீர்த்தி. திருமணம் முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் வழக்கமாக பணிக்கு சென்றார்.

ஆனாலும், கீர்த்தி மற்றும் சசிகாந்தின் உறவினர்கள், 200க்கும் மேற்பட்டோர், பல்வேறு ஊர்களில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்று, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக, திருமணத்துக்கு கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய கீர்த்தியை, அவரது தோழியர், உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
14-செப்-202022:09:47 IST Report Abuse
அசோக்ராஜ் விளம்பரத்துக்கு விளம்பரம். காசும் மிச்சப்படுத்தியாச்சு. டூட்டி மேல் பழியைப் போட்டு பின்னாளில் கருக்கலைப்பு செய்யாமல் இருந்தால் சரி. ஹே பகவான்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-செப்-202018:50:44 IST Report Abuse
Endrum Indian OMG இப்போவே ஆளுமை ஆரம்பித்தாகி விட்டதா. மணமகன் இப்போ மகுடிக்கு நல்ல ஆட்டம் போடவேண்டும். அம்மணி ஆசீர்வாதங்கள் வாழ்த்த்துக்கள் உங்களுக்கு இந்த மாதிரி கடமை உணர்ச்சி என்னை புல்லரிக்க வைக்கின்றது. இதிற் இப்படியே தொடரவும் பதவியில் உள்ள வரை. பாரத் மாதா கி ஜெ
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
15-செப்-202010:38:44 IST Report Abuse
 Muruga Velமணமகன் இப்போ மகுடிக்கு நல்ல ஆட்டம் போடவேண்டும். மணமகனா ?...
Rate this:
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
18-செப்-202009:56:26 IST Report Abuse
Chowkidar ModikumarEndrum Indian , பெண்களை போக பொருளாக பார்க்காமல் பெண்களிடம் அன்பு செலுத்தி அன்புக்கு அடிமையாகி பாருங்கள். ஆகா அந்த வாழ்க்கையின் அற்புத சுகம் அனுபவித்து பார்த்தால் தான் புரியும். சிலமணிநேர சுகத்துக்காக போதை வேணுமுன்னு காஞ்சா, டாஸ்மாக் னு போய் குடிச்சி போதை ஏத்தி உடம்பை, வாழ்க்கையை கெடுத்துகிறான், தியானம் பண்ணி பாரு, அதில் இருக்கிற நட்சத்திர அண்டத்தில் பறக்கிற பாக்கியம் மற்றும் போதை எந்த செயற்கை வஸ்துவிலும் இல்லை....
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
14-செப்-202012:23:53 IST Report Abuse
Girija விளம்பரம், வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாலன்ஸ் செய்யத் தெரியவில்லை. மீட்பு பணி போன்றவை என்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம், இதனால் கொரோனா குறைந்துவிட்டதா ?
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
14-செப்-202020:02:29 IST Report Abuse
தமிழ்வேள்நாலு பேர் கைதட்டுவான் நாலுபேப்பரில் பெயர் வரும் வேறென்ன ? இன்னும் ஓராண்டு அல்லது இரண்டு வருடங்களில் விவாகரத்து பற்றிய செய்தி வரும் ....இந்த மாதிரி விளம்பர பிரியர்களுக்கு வாழ்க்கை இந்த அளவில்தான் இருக்கும்...
Rate this:
Girija - Chennai,இந்தியா
14-செப்-202023:34:54 IST Report Abuse
Girijaஉங்கள் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன், நல்ல மனதுடன் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவதான் தமிழ் பண்பாடு . பெயரையும் திருவள்ளுவர் படத்தையும் போட்டுகொண்டால் மட்டும் போதாது . தவறுகள் மட்டும் தான் சுட்டிக்காட்ட வேண்டும், சாபம் கொடுக்கக்கூடாது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X