பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வில் 458 மாணவர்கள் பங்கேற்பு! தேர்வு மையத்தில் பலத்த பாதுகாப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், நடந்த நீட் தேர்வில், 458 மாணவர்கள் பங்கேற்றனர்; 202 பேர் தேர்வு எழுத வரவில்லை.பொள்ளாச்சி அருகே ஜமீன்முத்துார் ஏ.ஆர்.பி., இன்டர்நேஷனல் பள்ளியில், மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான, 'நீட்' தேர்வு நேற்று நடந்தது. தேர்வுக்கு வருவதற்கு வாகன வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. மாணவர்கள் வரிசையாக செல்ல தடுப்பு அமைத்தும், சமூக இடைவெளி பின்பற்றி நிற்க வெள்ளை கோடு வரையப்பட்டு இருந்தது.காலை, 11:00 மணி முதல், தேர்வு மையத்துக்குள் ஒவ்வொரு மாணவ, மாணவியராக உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தும்; முகக்கவசம், சானிடைசர், அனுமதி சீட்டு உள்ளதா என ஆய்வு செய்த பின் அனுமதிக்கப்பட்டனர்.பாதுகாப்புபொள்ளாச்சி டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், எஸ்.ஐ.,க்கள் ராஜேஷ் கண்ணா, ராஜேந்திரபிரசாத் உட்பட, 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தனிப்பிரிவு எஸ்.ஐ., மைக்கேல் சகாயராஜ், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் மாணவர்களுடன் வந்த பெற்றோருக்கு 'மைக்' மூலமாக அறிவுரை வழங்கினார். கோவை பாரதியார் பல்கலை கழக உதவி பேராசிரியர் கமலவேணி பார்வையாளராகவும், ஏ.ஆர்.பி., பள்ளி முதல்வர் அரசுபெரியசாமி மைய கண்காணிப்பாளராகவும் செயல்பட்டனர்.ஹாலுக்கு 12 பேர்கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியால், பொள்ளாச்சியில் முதல் முறையாக, 'நீட்' தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வரும் மாணவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு வகுப்பறைக்கு, 12 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம், 55 ஹாலில், 660 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு தேர்வு அறைக்கு, 2 கண்காணிப்பாளர் வீதம் மொத்தம், 110 பேர் கண்காணிப்பாளராக செயல்பட்டனர்.தேர்வில், 165 மாணவர்கள்; 293 மாணவியர் என மொத்தம், 458 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர். 65 மாணவர்கள், 137 மாணவியர் என மொத்தம், 202 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X