பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டம் நடத்துவதில் முறைகேடு? பி.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவு

Added : செப் 14, 2020
Share
Advertisement

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சி வார்டு உறுப்பினர் மணிகண்டன், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தில், புகார் மனு அளித்தார்.அதில், அனிக்கடவு ஊராட்சியில், வார்டு உறுப்பினர், முறையாக கூட்டம் நடத்தாமல், கூட்டம் நடத்தியதாக, கணக்கு காண்பித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, புகார் குறித்து, விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க, குடிமங்கலம் பி.டி.ஓ.,க்கு, ஊரக வளர்ச்சித்துறை, உதவி இயக்குனர், உத்தரவிட்டுள்ளார்.இதே போல், ஊராட்சியில், மொபைல்போன் டவர் உட்பட தனியார் நிறுவனங்களுக்கு, முறையாக வரி விதிக்காமல், வருவாய் இழப்பு ஏற்படுத்தியது மற்றும், குடிநீர் இணைப்பு வழங்கியதில், முறைகேடு குறித்து, விசாரணை நடத்த, ஊராட்சி துணைத்தலைவர் லலிதாமணி, ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளார்.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், அனிக்கடவு ஊராட்சி, மக்கள் பிரதிநிதிகள் அளித்த புகார் அடிப்படையில், விரைவில், விசாரணை நடத்தப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X