பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி விபரங்களை வழங்கி ஏமாற வேண்டாம்: விழிப்புடன் இருந்தால் விரயத்தை தவிர்க்கலாம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

உடுமலை:'ஹலோ சார்' நாங்க பேங்கிலிருந்து பேசறோம்' உங்க ஏ.டி.எம்., தவறான முறையில் பயன்படுவதை தடுக்க, பாஸ்வேர்டை எங்க கிட்ட சொல்லுங்க' இப்படித்தான் பரவி வருகிறது நுாதன முறையில் ஏமாற்றம்.இன்றைய சூழலில், வேலையில்லாத பட்டதாரிகள் அதிகரித்து வருவதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன, சில பணம் பறிக்கும் கும்பல்கள். வேலைவாய்ப்புகளுக்கு பதிவு செய்யும், அதிகாரப்பூர்வமான இணையதளங்களின் பெயரில் போலியாக ஒன்றை உருவாக்கி, அதிலிருந்து அழைப்பதாகவும், வேலைவாங்கி தருவதாகவும், இளைஞர்களை ஏமாற்றும் அமைப்புகள் தற்போது அதிகரித்து வருகின்றன.படிக்காத மக்களை ஏமாற்ற, வேறு பாணியில் வலைவீசுகின்றன. பேங்கிலிருந்து அழைப்பதாகவும், ஏ.டி.எம்., மோசடிகளை தடுக்க, 'பாஸ்வேர்டை' மாற்ற வேண்டும் என கூறி, அதை அறிந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதியில் குறிப்பாக, கிராம மக்களை இலக்காக தேர்ந்தெடுத்து, குழுக்களில் கடன் பெற்றிருக்கிறீர்களா, வங்கிக்கடன் உள்ளதாக வட்டி விகிதத்தை சோதனை செய்ய வேண்டும் என்பது போல பேசி, மக்களை குழப்புகின்றனர்.இதுபோன்ற, போலியான அலைபேசி இணைப்புகள் வருவதை, உடனடியாக போலீசில் தெரிவிக்க வேண்டுமெனவும், வங்கிகள் ஒருபோதும் ஏ.டி.எம்., எண்களை இவ்வாறு அலைபேசிகளில் கேட்கமாட்டார்கள் எனவும், வங்கி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.வங்கி அலுவலர் ஒருவர் கூறுகையில், ''தற்போது, இதுமாதிரியான புகார்கள் அடிக்கடி வருகின்றன. இன்னும் குறிப்பாக, வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல், அவர்களின் கணக்குகளிலிருந்து, தொகை காணாமல் போவதாகவும் புகார் பதிவாகிறது. வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டுள்ள 'ஆன்ட்ராய்டு' போன்களை, குழந்தைகளிடம் வழங்குவதை தவிர்க்க வேண்டும். தேவையில்லாத இணைப்புகளில் அவர்கள் பதிவுகளை மேற்கொள்வதால், எளிதாக சில மோசடி கும்பல்கள் உங்கள் கணக்குகளை 'ேஹக்' செய்து விடுகின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X